4வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 8,9ம் வகுப்பு மாணவர்கள்..!! போக்சோ வழக்கில் கைது..!!
ஆத்தூர் கெங்கவல்லி அருகே செயல்பட்டு வரும் தனியார் ஜி.இ.டி சி.பி.எஸ்.இ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி, படிக்கும் நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு, போலீசார் விசாரணையில் அம்பலம்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் தனியார் ஜி.இ.டி சி.பி.எஸ்.சி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் PREKG முதல் 12ம் வகுப்புவரை 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இதே பள்ளியில் ஒதியத்தூர் பகுதியை சேர்ந்த நான்கரை வயது சிறுமி எல்.கே.ஜீ படித்துவருகிறாள், நேற்று முன்தினம் பள்ளி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு சென்றுள்ளார், பின்னர் இரவு 8 மணியளவில் சிறுமி தனது பிறப்பு உறுப்பில் வலி ஏற்படுவதாக தாயிடம் கூறியுள்ளார்.
உடனே சிறுமியின் பெற்றோர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் சீண்டலுக்கு ஆளான அதிர்ச்சி தகவலை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் டி.எஸ்.பி, தலைமையிலான 20க்கும் மேற்பட்ட போலீசார் தனியார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி, கேமாராக்களை ஆய்வு செய்தனர், அதில் 13 வயது உடைய எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் மற்றும் 14 வயது உடைய 9ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஆகிய இருவரும் பள்ளி வேனில் வைத்து சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரிய வந்தது.
இதனையடுத்து 2 சிறுவர்களையும் போலீசார் தனியாக அழைத்து வந்து விசாரித்த போது அவர்கள் சிறுமியை துன்புறுத்தியதை ஒப்புக்கொண்டனர், பின் இருவர் மீதும் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து அவர்களை சேலம் இளம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறுவர்களை சேலம் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்துள்ளதுனர், இந்த சம்பவம் அந்த பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் மற்ற பெற்றோர்களும் அச்சம் அடைந்துள்ளனர்.