கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆய்வு தகவல்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆய்வு செய்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் அறிக்வட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கை சிபிசிஐடி காவல்துறை கடந்த ஓராண்டுக்கு மேலாக விசாரித்து வரும் நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதியிடம் சிபிசிஐடி தரப்பு மனுதாக்கல் செய்தனர்.
இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் பிஜின்குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் 8 செல்போன்கள் மற்றும் 4 சிம்கார்டுகள் கோவையில் உள்ள தொழில் நுட்ப ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, தகவல்கள் மற்றும் தகவல் பரிமாற்ற விபரங்களை அறிக்கையாகவும், ஆய்வு செய்யப்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகள் உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)