7,40,000 கோடி கடனை பெரு நிறுவனங்களுக்கு தள்ளுபடி..! மத்திய அரசின் பதில் என்ன..? எம்.பி.கனிமொழியின் கேள்வி..?
கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 14,50,000 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டு முதல் தள்ளுபடி செய்யப்பட்ட கார்ப்ரேட் நிறுவனங்களின் கடன் தொகை தொடர்பான விவரங்கள் குறித்து திமுக எம்.பி கனிமொழி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் எழுத்து பூர்வமாக பதில் கொடுத்துள்ளார்.
கார்ப்ரேட் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்களை ஆர்.பி.ஐ பராமரிப்பு செய்வதில்லை அதே சமையம் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்ற விவரத்தையும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
2014ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை ஒட்டு மொத்தமாக 14,56,226 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரு நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் என 7,40,000 ஆயிரம் கோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. என அவர் கூறியுள்ளார்.
Discussion about this post