திருப்பூரில் 7 வடமாநிலத்தவர்கள் கைது..! முக்கிய நகரங்களில் போலீஸ் சோதனை..!
ஆடைக்கு பிரசித்தி பெற்ற நகரமான திருப்பூரில் தமிழகத்தை சார்ந்தவர்கள் மட்டுமின்றி வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என சுமார் பத்து லட்சத்துக்கு மேலானவர்கள் என பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய மின்னலாடை தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்ததை அடுத்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு உத்தரவின் பேரில் திருப்பூர் கொங்கு நகர் பகுதி உதவி ஆணையர் அனில்குமார் தலைமையில் தனி படைகள் அமைத்து ஆங்காங்கே குடியிருப்பு பகுதிகளில் இருக்கக்கூடிய வட மாநிலத்தவர்களை காவல்துறையினர் கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பொம்மநாயக்கன்பாளையம் பவானி நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் வடக்கு காவல் ஆய்வாளர் உதயகுமார், வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையிலான தனிப்படை போலீசார் வடமாநிலத்தவர்கள் தங்கி இருந்த வீட்டை சோதனை மேற்கொண்டதில் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 18 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதனை தொடர்ந்து அங்கிருந்த வட மாநிலத்து அவர்களை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பிடிபட்ட கஞ்சா பீகார் மாநிலத்திலிருந்து அபினேஷ் குமார் என்பவர் திருப்பூருக்கு கொண்டுவந்து பின்னலாடை தொழிலாளர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பிகார் மாநிலத்தைச் சார்ந்த ரோஷன் குமார் விரிஜி குமார் ஆகியோரும் ஹரியானாவைச் சார்ந்த சன்னி என்பவரும் டெல்லியைச் சேர்ந்த முகேஷ் என்பவர் உள்ளிட்ட ஐந்து பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து கைப்பற்றப்பட்ட 18 கிலோ 500 கிராம் கஞ்சாவையும் 5 நபர்களையும் காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதே போல 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான வஞ்சிபாளையம் பகுதியில் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த பிஹார் மாநிலத்தைச் சார்ந்த அமித் குமார் மற்றும் ராகுல் குமார் என்ற இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 1500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பூர் பினலாரை நிறுவனங்களில் பணியாற்றும் பின்னலாடை தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஏழு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.