போக்குவரத்து விதிமீறல் வழக்கில் 7.96 கோடி ரூபாய் வசூல்..!!
தமிழ்நாட்டில் போக்குவரத்து வீதிமீறல் களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் வசூல் செய்யும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் அதிகம் வசூல் ஆகியிருப்பதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகர மாநகரத்தில் பல்வேறு விதிமீறல்கள் ஏற்பட்டுள்ளன. 6000க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது தினமும் வழக்கு பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் பலரும் அதே தவறை தான் செய்கின்றனர்.
அப்படி விதி மீறுபவர்கள் அபராத தொகையை சரியான நேரத்தில் செலுத்தாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் 156 இடங்களில் வாகன சோதனைகள் நடத்தியுள்ளனர்.
அதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் மீது செய்யப்பட்ட வழக்கு மட்டும் 93. 8613 வழக்குகள் தீர்வு காணப்பட்டு இணையதளம் வாயிலாக 38 லட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாய் வரை அபராத தொகை வசூல் ஆகியுள்ளது.
மூன்று நாட்களில் மட்டும் 38,31,500 என்றால் கடந்த 5 மாதத்தில் 1,90,246 வழக்குகள் தீர்வு காணப்பட்டு 7,96,97,130 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. கட்டணம் செலுத்தும் வாகன ஓட்டிகள்.., அபராதம் கட்டிக்கொள்ளலாம் என்று அலட்சித்தில் தான், இது போன்ற தவறுகளை செய்கின்றனர்.
இதனால் பொது மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.. அபராதம் செலுத்தும் வாகன ஓட்டிகள் மற்றவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு சாலை விதிகளை மதித்தாலே போதும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
Discussion about this post