அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு..! எந்த பட்டபடிப்புகளுக்கு தெரியுமா..?
கால்நடை இளநிலை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று சிறப்பு பிரிவு மாணவர்களுக்காக கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. அன்றைய தினம் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டில் உள்ள இடங்களை பூர்த்தி செய்வதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இந்த கலந்தாய்வு சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் இந்த கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. முக்கியமாக கால்நடை மருத்துவ படிப்பிற்கான இளநிலை மருத்துவபடிப்புகள் இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம், கோழியினத் தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் என மொத்தம் 692 இடங்கள் உள்ளது.
இவற்றில் இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் 600 இடங்களும், உணவு தொழில்நுட்பம், கோழியினத் தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்ப படிப்புகளில் 92 இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப் பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் இருக்க கூடிய கால்நடை மருத்துவ கல்லூரியில் இருந்து 9 கல்லூரிகளில் மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 52 இடங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதில் 176 மாணவ மாணவிகள், அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள்.
இந்த கலந்தாய்வின் மூலம் மாணவ மாணவிகள் தங்களுக்கு விருப்பபமான கல்லூரியை அவர்களே தேர்வு செய்துக்கொள்ள முடியும். அவர்களுக்கான சேர்க்கை ஆணையம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.