6ம் ஆண்டு நினைவு தினம்..! கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..!!
கலைஞர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.. அதன் பின் எம்.பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துறை முருகன், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திமுக நிர்வாகிகள் என பலரும் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்..
அதன் பின் முதமைச்சர் ஸ்டாலின் அண்ணா சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. அதனை தொடர்ந்து சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்..
அதன் பின் திருச்சி காட்டூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.. இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என திரளானோர் பங்கேற்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..