கலைஞர் 6ம் ஆண்டு நினைவு தினம்..! கலைஞர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..!!
திருப்பூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலையை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது..
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருஉருவப் படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர். க.செல்வராஜ் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்.செல்வராஜ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர். தினேஷ்குமார், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகர் மாவட்ட செயலாளர். நாகராஜ், மாநகராட்சி துணை மேயர். பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தலைவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..