60 ரூபாய் வழிப்பறி..!! 20 ஆண்டுக்கு பின் காவலர்கள் அதிரடி..!!
மதுரையை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 55) இவர் கடந்த 1997ம் ஆண்டு மதுரை அண்ணாநகர் ஜாக்கோப் தோப்பு பகுதியில் 60 ரூபாயை வழிப்பறி செய்ததாக., தெப்பக்குளம் காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
அதன் பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.. ஆனால் இவர் விசாரணைக்காக நேரில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ளார்..
அதன் பின்னர் இவரை பிடிக்க மதுரை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.., மேலும் அவரை பிடிக்கும் முயற்சியில் தனிப்படை அமைத்து தேடியுள்ளனர்..
இந்நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தலைமறைவானவர்களை பிடித்து, விசாரணையை முடிப்பதற்காக மதுரை காவல்துறை உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையில் மாநகர காவல்துறையினர் தீவிர சோதனை செய்துள்ளனர்..
அப்போது சிவகாசியில் பன்னீர்செல்வம் குடும்பத்துடன் வசித்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.. கிடைத்த தகவலின் படி அங்கு சென்று ஆய்வு செய்ததில் சிவகாசியில் ஒயின் ஷாப்பில் வேலை செய்துக் கொண்டிருந்த பன்னீர்செல்வத்தை காவலர்கள் கைது செய்து., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.
60 ரூபாய் வழிப்பறி செய்த நபரை 27 ஆண்டுகளுக்கு பின் கைது செய்து இருப்பது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..