கடப்பாவில் கார் மீது லாரி மோதியதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஆனந்தபுரம் மாவட்டம் தாடிபத்ரி, கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு துபான் சுற்றுலா வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
பக்தர்கள் சென்ற வாகனம் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம்
கொண்டாபுரம் மண்டலம் பி.அனந்தபுரம் சித்ராவதி ஆற்றுக்கு இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சென்றபோது தாடிபத்ரியில் இருந்து கடப்பா நோக்கி வந்த லாரி மோதிய விபத்தில் 6 பேர் இறந்தனர்.
இன்னும் 20 நிமிடத்தில் சொந்த ஊரான தாடிபத்திரிக்கு செல்ல இருந்த நிலையில் இந்த விபத்து நடைபெற்றது. காயமடைந்தவர்கள் தாடிபத்ரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post