பெண்கள் வங்கி கணக்கில் 50,000 ரூபாய்..!! தமிழக அரசின் அடுத்த அசத்தல் திட்டம்..!!
கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாயை பல பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர்.. அதன் பின் மாணவர்களுக்கான மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை திட்டம் வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் பெண்களுக்கான அடுத்த ஒரு அசத்தல் திட்டத்தையும் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது..
அதாவது பெண்களின் வங்கி கணக்கில் மாதம் 50,000 ரூபாய் வழங்கும் ஒரு புதுவித திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.., இந்த திட்டம் யாருக்கெல்லாம் பயன் பெரும் அதில் சேருவதற்கான வழிகள் என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்..
விண்ணப்பிக்க தகுதியுடைய பெண்கள் :
இந்த திட்டத்தில் அனைத்து விதமான பெண்களும் விண்ணப்பிக்கலாம் அதாவது, சுயதொழில் செய்யும் பெண்கள்., படித்து முடித்து சொந்த தொழில் செய்ய நினைக்கும் பெண்கள்., என அனைத்து பெண்களும் இதில் விண்ணப்பிக்கலாம்..
இந்த திட்டத்திற்காக தமிழக அரசு 1 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது., முதலவவதாக இந்த திட்டத்தில் விண்ணப்பித்துள்ள கைதொழில் செய்யும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் என 200க்கும் மேற்பட்டருக்கு இந்த பணம் வழங்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தில் பெரும்பாலும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள 25 வயது முதல் 45 வயதுக்குள் உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்., அதிலும் இந்த பணத்தை சுயத்தொழில் செய்யவதற்காக மட்டுமே 50,000 வழங்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற நினைக்கும் பெண்கள் நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலரை சந்தித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள திட்டம் குறித்து கூறி முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்படிவ ஆவணங்களில் நீங்கள் கணவனால் கைவிடப்பட்டவர்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் என்பதற்கான ஆவணத்தை சமர்பித்த பெண் (verfication ) செய்யப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைக்கு கொண்டு செல்லப்பட்டு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்..
இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களும் பயன் பெற முடியும்., 2023-2024 ஆம் கல்வி ஆண்டின் நிதி உதவியாக மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படவுள்ளது.. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள்
இளநிலை படிப்பு பொறியியல்படிப்பிற்கான ஊக்கத்தொகையாக தமிழக அரசு நிதி உதவி வழங்க இருக்கிறது.. மற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு மாணாவர்களுக்காக தமிழக அரசு கட்டணமில்லாக் கல்வியை வழங்குகிறது. இந்த திட்டத்தை 2007-08-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞரால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..