பள்ளி நிர்வாகத்தால் 50 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!! பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சி..!!
திண்டிவனம் அருகே உள்ள தனியார் மழலையர் பள்ளியில் 50-க்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கு தேனீ கொட்டியதால் அரசு மருத்துவ மனையில் அனுமதி
திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் தனியார் மழலையார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம்போல் பள்ளி தொடங்கியுள்ளது.., அப்போது எதிர்பாராத விதமாக தேனீக்கள்.., வகுப்பில் படித்து கொண்டிருந்த மாணவர்களை தாக்கியுள்ளது..
சத்தம் கேட்டு அங்கே வந்த ஆசிரியர்கள்.., மற்றும் பள்ளி நிர்வாகிகள் மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ததில் வகுப்பறைக்கு அருகே இருந்த மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்களின் மீது கல் எரிந்து கழைக்கப்பட்டதால்.., மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
தேனீயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு தேனீக்கள் கொட்டிய இந்த சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post