ஜப்பானின் ஃபுக்குஷிமா அருகே ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவின் லடாக் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் இன்று(மார்ச்.17) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
இது குறித்து ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிமீ தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே இன்று இரவு இந்திய நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 60 கிலோமீட்டர் ஆளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் லடாக் பகுதியிலும் நேற்று இரவு 7.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், இந்தியாவின் லடாக் பகுதியிலும் நேற்று இரவு 7.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமி மட்டத்தில் இருந்து 110 கிலோ மீட்டர் ஆழத்தில், அட்சயரேகையில் 36.01 டிகிரி கோணத்தில், தீர்க்கரேகையில் 75.18 டிகிரி கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.