திருப்பூரில் ரயில்வே மேம்பாலத்தை எ.வ வேலு திறந்து வைத்தார்!!
திருப்பூரில் தெற்கு மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதிகளை இணைக்கக்கூடிய ரயில்வே மேம்பாலத்தை மாநில பொதுப்பணித்துறை , நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ வேலு திறந்து வைத்தார்.
திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதியில இணைக்கக்கூடிய வகையில் ஒரே ஒரு பாலம் மட்டும் இருந்ததன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதனை கருத்தில் கொண்டு திருப்பூர் – வாவிபாளையம் சாலை, பாளையக்காட்டில் கடந்த 2012 ஆம் ஆண்டு 524 மீட்டர் தூரத்திற்கு பாளையக்காட்டிலிருந்து வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோல்டன் நகர் வரை ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
48.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த பால கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் திறப்பு விழா காணப்பட்டது.
பொதுப்பணித்துறை , அமைச்சர் எ.வ வேலு கலந்து கொண்டு பாலத்தை திறந்து வைத்து வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் , ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , மாநகராட்சி மேயர் , சட்டமன்ற உறுப்பினர் , மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.