கஜகஸ்தான் விமான விபத்து..!! 42 பேர் உயிர் இழப்பு…!!
கஜகஸ்தான் விமான விபத்தில் உயிர் இழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அசர்பைஜானின் பாகுவில் இருந்து ட்ரோஸ்னி நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் மூடு பனி காரணமாக, வெகு நேரமாக வானில் வட்டமடிதுள்ளது. எனவே கஜகஸ்தானின் அக்டாவ் பகுதியில் தரையிறங்க முற்பட்ட போது கிழே விழுந்து வெடித்து சிதறியது.
இதில் 42க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ள நிலையில், 25 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும், மற்றவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக விமானத்தை தரை இறங்க முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..