இன்னும் 4 நாட்களுக்கு தமிழகத்தில்..!! 14 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்னும் 4 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோரப்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடர் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர், விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான கனமழையும் பெய்யும் என தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ( மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை ) சூறைக்காற்று வீசும் என தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு ரெட் அலார்ட்டும் விடப்பட்டுள்ளது.. மேலும் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று முதல் இன்னும் 4 நாட்களுக்கு அதிக பட்ச வெப்பநிலையாக 2-3 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும்.
வட தமிழக மாவட்டங்களில் 37°-39° செல்சியஸ் வரையிலும், இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-37° செல்சியஸ். மற்றும் கடலோர மாவட்டங்களான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31-36° செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவித்துள்ளது.