பராமரிப்பு பணி காரணமாக இன்றும் , நாளையும் 4 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே சார்பில் பராமரிப்பு பணி மற்றும் பழுது நீக்கும் பணி ஆகியவை நடைபெறும்போது ரயில்கள் ரத்து செய்யப்படுவதும் அதன் நேரம் மாற்றி அமைக்கப்படுவதும் வழக்கம். அந்த வகையில் பராமரிப்பு பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் 4 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வேளச்சேரி – பட்டாபிராம் இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கபடும் மின்சார ரயில், ஆவடி- பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் ரயில் , மூர்மார்க்கெட்- திருவள்ளூர் இடையே இரவு 11:15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் மற்றும் திருவள்ளூர் – ஆவடி இடையே இரவு 10.10 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் இன்று(மார்ச்.25) முதல் 29 ஆம் தேதி வரை மற்றும் ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ், விருதுநகர் நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என்றும்,தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் மதுரை நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
இந்த நாட்களில் சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் , சென்னை – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.