ரிச்சி ஸ்ட்ரீட்டில் யுடியூபரை தாக்கிய 3 பேர்..! வைரலாகும் வீடியோ..!
சென்னையின் எலக்ட்ரிக் சிட்டியின் நகரமாக திகழும் ரிச்சி ஸ்ட்ரீட்டில் பிரபல யுடியூபர் நந்தகுமாரை 3 பேர் வழிமறித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள எலக்ட்ரிக் சிட்டியின் நகரமாக திகழும் ரிச்சி ஸ்ட்ரீட் அனைத்து வகையான எலக்ட்ரிக் பொருள், கேமரா, செல்போன் போன்ற அனைத்து பொருட்களுக்கும் பேர் போன ஒரு இடம் என சொல்லலாம், இங்கு பொருட்களை வாங்குவது விற்பனை செய்வது போன்ற செயல்கள் நடைபெறும்.
இந்நிலையில் பிரபல யுடியூபரான A2D Youtube சேனல் நடத்தி வரும் நந்தா.., இவர் தனது யுடியூப் பக்கத்தில் எலக்ட்ரானிக் சார்ந்த பொருட்களை பற்றி பேசி வீடியோ போட்டு வந்துள்ளார்.. இந்நிலையில் அவர் ரிச்சி ஸ்ட்ரீட்டுக்குள் வீடியோ எடுத்துக்கொண்டு சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்த சில மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளனர்.
அதோடு அவரிடம் நானும் ரவுடி தான், ஒரு குரல் கொடுத்தால் அனைவரும் வந்து விடுவார்கள்.. எனக்கூறி தனியே அழைத்துச் சென்று சில மது போதை இளைஞர்களுடன் சேர்ந்து அவர்களை மிரட்டி கேமராவை பறித்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. அப்போது இதனை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் மது போதையில் இருந்த இளைஞர்களிடம் பேசி கேமராவை பெற்று தந்தார்.
அதை அப்படியே தனது யூடியூப் சேனலில் வீடியோவாக நந்தகுமார் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அந்த வழிப்பறி நபர்கள் கூறியும் அவர் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக இந்த வீடியோவை பிரபல யூடியூபர் தீபன் சக்கரவர்த்தி ட்விட்டரில் சென்னை காவல் துறையை டேக் செய்து பதிவிட்டுள்ளார். அதன் பின்னரே இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவலர்கள் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னரே அந்த 3பேரும், பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீதர், பார்த்திபன், கிஷோர் என்பது தெரியவந்தது. அதை அடுத்து அவர்களை கைது செய்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.
– லோகேஸ்வரி.வெ