மன்னார்குடியில் மினி பால் பண்ணை அமைக்கப்படும் என மனோ தங்கராஜ் உறுதி..
மன்னார்குடியில் மினி பால் பண்ணை அமைக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
நாகை, திருவாரூர் , மயிலாடுதுறை மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பால்வளத்துறை மனோ தங்கராஜ், தொழிற்துறை அமைச்சர் டி. ஆர்.பி.ராஜா உள்ளிட்ட வருவாய்த்துறை , கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து 350 நபர்களுக்கு 3, கோடியே 40 இலட்சம் மதிப்பீட்டில் பயணாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார்கள். அதனை தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில் , மன்னார்குடியில் விரைவில் மினி பால் பண்ணை அமைக்கப்படும் என தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.