27 ஆண்டுகள் நிறைவு பெற்ற சூர்ய வம்சம்..!
1997ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சூர்யவம்சம். இந்த படத்தில் சரத் குமார், தேவயானி , ராதிகா, மணிவண்ணன், மாளவிகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தில் சரத்குமார் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் வில்லனாக ஆனந்த ராஜ் நடித்துள்ளார்.
மறு ஆக்கம் செய்யபட்ட இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம் , இந்தி என மூன்று மொழிகளில் வெளியானது என்பது குறிப்படித்தக்கது.
கதை சுருக்கம்:
படிக்காத சரத் குமார் பட்டதாரியான தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இந்த திருமணம் பிடிக்காத அப்பா சரத்குமார் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அதன் பிறகு சரத் குமாரும், தேவயானியும் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் எப்படி சாதிக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.
அப்பா சரத் குமாருக்கு மனைவியாக ராதிகாவும், மகன் சரத் குமாருக்கு மனைவியாக தேவயானியும் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளது. அந்த 6 பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.
குறிப்பாக நட்சத்திர ஜன்னல் பாடல் படத்தின் மோட்டிவேஷன் பாடலாக அமைந்திருக்கும். அதிலிருந்து சில வரிகள்..
சித்திரங்களை பாடச்சொல்லலாம் தென்றலை அஞ்சல் ஒன்னு போட சொல்லலாம் புத்தகங்களில் முத்தெடுக்கலாம் பொன்னாடை இமயத்திற்கு போட்டு விடலாம்…..
இன்றைக்கும் இந்த பாடல் கிராம புறங்களில் உள்ள பேருந்துகளில் ஒடிக்கொண்டு தான் இருகிறது. இப்படி பல ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள் மனதில் இடம் பெற்ற இந்த படம் வெளியாகி ஜூன் 27 இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
-பவானி கார்த்திக்