திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் கொள்ளை..!!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ள கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே உள்ள கொழுஞ்சி காட்டு வலசு. இங்கு கோவை சேர்ந்த மூன்று சகோதர்கள் விஸ்வநாதன், துரைசாமி, கிருஷ்ணசாமி ஆகியோர். வேஸ்டி பனியன், துணியில் இருந்து மீண்டும் நூல் தயாரிக்கும் ஸ்பின்னிங் மில் நடத்தி வருகின்றனர்.
ஜெய் குமரன்ஸ் பின்னிங் மில் என்ற பெயரில் கடந்த 5 வருடங்களாக கொழுஞ்சி காட்டு வலசு என்ற இடத்திலும் வெள்ளகோவில் பகுதிகளில் மேலும் இரண்டு இடங்களிலும் ஸ்பின்னிங் மில் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 4 மாதங்களாக தொழில் மந்தம் அடைந்த நிலையில் உற்பத்தி செய்து வைத்திருந்த நூல்கள் ஏராளமாக இருப்பு வைக்கப்பட்டிருந்தது.
நேற்று விஸ்வநாதன் மற்றும் கிருஷ்ணசாமி கோவை சென்ற நிலையில் மில்லில் காவலர் இல்லாத நிலையில் துரைசாமி மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா ஆகியோர் ஸ்பின்னிங் மில்லில் உள்ள அலுவலகத்திலேயே பாதுகாப்பிற்கு தங்கிவிட்டனர்.
இந்நிலையில் மில்லின் உள்ளே வந்த கொள்ளையர்கள் இயந்திரங்களை கொள்ளை அடிக்க சில இயந்திரங்களை தனித்தனியாக பிரித்து வைத்துள்ளனர். பின்னர் மில்லின் பின் பகுதிக்கு சென்று அங்கிருந்த வீட்டின் பூட்டை இரும்பு கம்பி வைத்து உடைத்து வீட்டினில் இருந்த மூன்று பீரோக்களையும் உடைத்து அதிலிருந்த தங்க நகை 26 பவுன் மற்றும் ரூபாய் 10 லட்சம் ரொக்கம் மற்றும் வங்கி செக் புக், மற்றும் சில ஆவணங்கள் வைத்திருந்த கை பை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கழட்டிய இயந்திரங்களை அப்படியே விட்டு விட்டு சென்றனர். வழக்கம் போல் காலை எழுந்த துரைசாமிக்கு அதிர்ச்சி எப்படி இயந்திரங்களின் சிலபாகங்கள் வெளியே கிடக்கின்றது என்று, மில்லின் பின் பக்கம் உள்ள வீட்டை பார்க்கையில் பூட்டு உடைக்கப் பட்டு, பீரோவும் உடைக்கப் பட்டு கொள்ளை நடந்துள்ளது தெரியவந்தது.
உடனடியாக துரைசாமியின் சகோதரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு கோவையில் இருந்து விஸ்வநாதன் மற்றும் கிருஷ்ணசாமி கொழுஞ்சி காட்டு வலசிற்க்கு வந்து பார்த்த பின் வெள்ள கோவில் காவல் துறையில் புகார் அளித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் கொள்ளையர் களின் கைரேகைகள் பயன்படுத்திய ஆயுதங்களின் கைரேகைகள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து சென்றனர். வெள்ள கோவில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வெள்ள கோவில் அருகே புதுப்பையில் ஈஸ்வரன் ஸ்டோர் மளிகை கடை உள்ளது. இதை வெங்கடேஸ்வரன் பவித்ரா தம்பதியினர் நடத்திவருகிறார்கள். கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுப்பையில் இரவு கடையை பூட்டி விட்டு உள்ளே ஒரு அறையில் தூங்கினார்கள். அதி காலை எழுந்து பார்க்கும் போது கடையில் உள்ளே கல்லாவில் இருந்த நாற்பதாயிரம் மற்றும் நாலரை பவுன் வளையல் ரெண்டும் கைபேசியும் திருட்டுப் போனது.
கடையின் ஷட்டர் உடைத்து உள்ளே சென்று கொள்ளை சம்பவம் அரங்கேறிய வேளையில் வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் கொள்ளைபோனது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் ரோந்துப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post