இலவச வீட்டு மனை பட்டா நிலத்தில் வீடு கட்டி தர மக்கள் மௌன போராட்டம்…
கோவில்பட்டியில் அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா நிலத்தில் வீடு கட்டி தர வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அப்பகுதி மக்கள் மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனியன் இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட தியாகி லீலாவதி நகரில், 22 ஆண்டுக்கு முன் ஆதிதிராவிட நலத்துறை மூலம் 500க்கும் அதிகமான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டது.
ஆனால், இலவச வீடு வழங்கும் திட்டத்தில், இந்த பயனாளிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்காமல் புறக்கணித்து விட்டதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி கடந்த சில ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அப்பகுதி மக்கள் மீண்டும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மெளன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜேஷ்குமாரிடம் மனு அளித்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Discussion about this post