நிறைவேற்றப்பட்ட 22 தீர்மானங்கள்..! மதிமுக 30ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்..!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்- 30 ஆவது பொதுக்குழு கூட்டம் அண்ணா நகரில் உள்ள விஜயஸ்ரீ மஹால் நடைபெற்று வருகிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 30 ஆவது பொதுக்குழு,காலை 10 மணி அளவில் சென்னை, அண்ணாநகர், விஜயஸ்ரீ மஹாலில் கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்று வருகிறது இக்கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, கழக முதன்மைச் செயலாளர் எம்பி துரைவைகோ பொருளாளர் செந்திலதிபன், துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 22 தீர்மானங்களை மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி மாநில செயலாளர் ஆவடி அந்தரி தாஸ் வாசித்தார்.. தீர்மானங்களை கழக பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானங்களுக்கு ஆதரவளித்து கூட்டத்தில் நிறைவேற்றினர்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 39 இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு இடத்திலும் என 40க்கு 40 எனும் பெரும் வெற்றியை அளித்திருக்கின்ற வாக்காளர் பெருமக்களுக்கு மதிமுக பொதுக்குழு நன்றி தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றினர்.
நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் துரை வைகோ அவர்கள் 3 இலட்சத்து 13 ஆயிரத்து 90 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெறுவதற்கு துணை நின்ற திராவிட முன்னேற்றக் கழக தலைவர் – தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் கழகப் பொதுக்குழு நன்றியை தெரிவித்து, நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் வெற்றி பெற்று கழக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்களுக்கு கழகப் பொதுக்குழு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றினர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..