“20 ஓவர் 6 விக்கெட்..” சிஎஸ்கே னா சும்மாவா…!!!
ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசன், சென்னையில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.
இந்த ஐபிள் மேட்சை பார்க்க உலகம் முழுவது கிரிக்கெட் ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் குவிந்தனர்.
எதிர்பார்க்கும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் உள்பட மொத்தம் 10 அணிகள் களமிறங்குகின்றன.
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியுடன், டு பிளெஸ்ஸி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதியது.
இந்த முதல் ஆட்டத்தை பார்க்க பாலிவுட் நடிகர் அக்ஷய், டைகர் ஷெராப் இருவரும் தேசியக் கொடியை ஏந்தியபடி மோட்டார் பைக்கில் மைதானத்தை வலம் வந்தனர்.
இதைத் தொடர்ந்து, சிஎஸ்கே – ஆர்சிபி மோதிய தொடக்க லீக் ஆட்டம் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..