தினந்தோறும் 2ரவுடிகள்..! சென்னை கமிஷ்னர் அதிரடி..!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் “ஆம்ஸ்ட்ராங்” படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சரி செய்ய சென்னையின் புதிய கமிஷனராக “அருண்” நியமனம் செய்யப்பட்டார்.. செய்யப்பட்ட நாளில் இருந்தே பல ரவுடிகளுக்கு பீதியை கிளப்பியுள்ளது என சொல்லலாம். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கமிஷனர் அருண் பேசியதாவது.,
“சென்னை எனக்கு புதிதல்ல.. இங்கு பல்வேறு பகுதிகளில் நான் பணியாற்றி இருக்கிறேன். இப்போது சென்னையில் இருக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனை, குற்றம் தடுப்பு நடவடிக்கைகள், போக்குவரத்தில் இருக்கும் சில சிக்கல்கள், ரவுடிசத்தை கட்டுக்குள் கொண்டு வருவது, போலிஸில் இருக்கும் ஊழல், கட்டப்பஞ்சாயத்து, அவற்றை கண்ட்ரோல் செய்வது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பேன்.
ரவுடிகளுக்கு அவர்களுக்கு புரிகின்ற பாஷையில் சொல்லி தருவேன். தினமும் ஒரு திட்டத்தை கொண்டுவருவது தேவையில்லை, காவல்துறை அதிகாரிகளும் போலிசார்களும் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலே பல குற்றங்கள் குறையும்.. தமிழகம் நல்லபெயரை எடுக்கும் விதமாக சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும்” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ரவுடிகளை ஒழிக்க ரவுடிகளின் மொழியிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரின் இந்த சொல் பொதுமக்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் காவல் ஆணையர் அருண், காவல் துறையினருக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது, சென்னை காவல் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும்.
குறைந்தபட்சம் தினமும் இரண்டு ரவுடிகள் என்ற அடிப்படையில், ரவுடிகள் இருக்கும் இடத்திற்கே காவல்துறையினர் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும்.
ரவுடிகள் சட்டவிரோதச் தற்போது சரித்திரப் பதிவேட்டில் இருக்கும் ரவுடிகளை எச்சரிப்பதோடு மட்டுமல்லாமல், ரவுடிகளின் உறவினர்களுக்கு அறிவுரை தர வேண்டும்.
ரவுடிகள் சட்டவிரோதசெயல்களில் ஈடுபடாமல் இருக்கிறார்களா என்பதை நேரடியாக கண்காணிக்க வேண்டும்.
நிபந்தனை ஜாமினில் இருக்கும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், நிபந்தனைகளை மீறி செயல்பட்டாலோ, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தாலோ அவர்களின் ஜாமின் ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதேபோல் நேற்று ஒரு புதிய சுற்றறிக்கையை “சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம்”, காவல் துறையினருக்கு அனுப்பியுள்ளார். அதில் சில அறிவுறுத்தல்களையும் வலியுறுத்தியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்கள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகளுடன் மரியாதையான மற்றும் பயனுள்ள தகவல்தொடர்புகளை உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் கீழ் பணிபுரிபவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
பொதுமக்களிடம் பேசும்போது மிஸ்டர், மிஸ்ஸஸ், சார், மேடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். ஒருமையில் பேச கூடாது.
பொதுமக்களின் குறைகளை கவனமாக கேளுங்கள்.
உங்கள் உடல்மொழி அச்சுறுத்தும் வகையில் இருக்கக் கூடாது.
பொதுமக்கள் புரிந்து கொள்ளாத வாசகங்கள் அல்லது தொழில்நுட்ப சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என புதிய அறிவுறுத்தல்களை குறிப்பிட்டுள்ளார்.
ரவுடிகளின் அராஜகம் மற்றும் அடாவடிகளை கட்டுப்படுத்துவதற்காக சில காவல் ஆய்வாளர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் கமிஷ்னர் அருண் மீது மக்களின் நம்பிக்கை திரும்பியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..