1500 சுகாதாரத்துறை காலி பணியிடங்கள் நிரப்பும் பணி தீவிரம்..!!
சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 1500-க்கும் மேற்பட்ட, மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மதுரையில் நடந்த மாநில கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாநில செயற்குழு கூட்டம் :
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில செயற்குழு கூட்டம், மதுரையில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாநில தலைவர் விஜய குமாரன் தலைமை தாங்கினார். அவரை மதுரை மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். பொதுச்செயலாளர் சண்முகம், வேலை அறிக்கையையும், மாநில பொருளாளர் ஹேமலதா பொருளாளர் அறிக்கையை வாசித்தார்.
இந்த கூட்டத்தில், சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 1500-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அதற்கு சில தீர்மானங்கள் பற்றி பேசியது.
* 39 நகர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை வாய்ப்பு முகாம் மூலமாக, முறையான பணி நியமனம் செய்யப்பட்ட மருந்தாளுனர்களை அரசாணைப்படி நிரந்தரமாக பணியில் அமர்த்திட வேண்டும்,
* 46 துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகங்களில், தடுப்பூசி மருந்துகள் மற்றும் மருந்துகளை பராமரித்து வினியோகம் செய்து தலைமை மருந்தாளுனர் பணியிடம் உருவாக்க வேண்டும்,
* 385 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்த கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்கிட வேண்டும்,
* தலைமை மருந்தாளுனர், மருந்து கிடங்கு அலுவலர் ஊதியம் முரண்பாட்டை களைந்திட வேண்டும் என்பது உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
3 நாள் போராட்டம் :
இது குறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் கூறுகையில், சுகாதாரத் துறையில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு வழிவகை செய்திட வேண்டும். மேலும் எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் 16, 17, 18-ந்தேதிகளில் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்.
அன்றைய தினம், எங்களது கோரிக்கை மனுக்களை முதலமைச்சர், மற்றும் முதலமைச்சரின் செயலாளர், இயக்குனர்கள் ஆகியோருக்கு அஞ்சல், மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
இதுபோல், செப்டம்பர் மாதத்தில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மேல் முறையீடு செய்ய இருக்கிறோம் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Discussion about this post