தம்பியை கொன்ற 15 வயது அக்கா..!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்..!
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சித் சர்மா இவருக்கு, 15 வயதில் ஒரு மகள் மற்றும் 12 வயதில் ஒரு மகன் இருந்துள்ளான். இவர்கள் இருவருக்கும் சிறுவயதில் இருந்தே ஒற்றுமை இல்லை என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.
ஆண் குழந்தை பிறந்ததும், பெற்றோர்கள் இருவரும் இரண்டாவது குழந்தையின் மீது அதிக பாசம் காட்ட ஆரமித்துள்ளனர். இதனால் சிறு வயதில் இருந்தே தம்பியை வெறுக்க ஆரமித்துள்ளார் 15 வயது சிறுமி.
ஒரு நாள் சிறுமியின் போனை எடுத்து, சகோதரன் விளையாடி கொண்டி இருக்க, வெறுப்பில் போனை தம்பியிடம் இருந்து பறிக்க முயன்றுள்ளார். சிறுவன் தர மறுக்க இருவருக்கும் சண்டை ஆரம்பித்துள்ளது.
ஆத்திரத்தில் சிறுவனின் கழுத்தை நெரித்துள்ளார், அதில் சிறுவன் இறந்தும் உள்ளான். வேலைக்கு சென்ற பெற்றோர் திரும்பி வந்து பார்த்தபோது, சிறுவனை காணவில்லை.
சிறுமியிடம் தம்பி எங்கே என்று கேட்டதற்கு, கழுத்தை நெரித்து கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். நீங்கள் அவன் மீது அதிகம் பாசம் காட்டியதால் தான், நான் இப்படி செய்தேன் என்றும் கூறியுள்ளார்.
பின் இந்த சிறுமையை காவலர், சிறுவர் சீர் திருத்த பள்ளியில் சேர்த்துள்ளார்.
பெற்றோர்கள் உங்களின் அனைத்து குழந்தைகளுக்கு சமமாக அன்பு கொடுத்தால், இதுபோன்ற தவறான முடிவுகள் ஏற்படாது எனவும் கூறினார்.
Discussion about this post