ஒரே நாளில் 15 ஆயிரம் கோடி..!! தங்கம் விற்பனை..!! அக்ஷ்யதிருதி ஸ்பெஷல் ஆப்பர்..?
அட்சய திருதியை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அனைத்து நகை கடைகளிலும் தோரணங்கள் மற்றும் வாழை மரங்கள் கட்டி வாடிக்கையாளர்களை உரிமையாளர்கள் வரவேற்றனர்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கத்தின் விலை 3 முறை உயர்ந்துள்ளது. நேற்று காலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 53 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனையடுத்து இரண்டாவது முறையாக மீண்டும் 360 ரூபாய் உயர்ந்து சவரன் ஒன்றுக்கு 53 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து மீண்டும் 3-வது முறையாக சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இருப்பினும் பல சிறப்புத் திட்டங்களை அறிவித்ததால் கடைகளில் கூட்டம் அலைமோதியது. சென்னை மட்டுமல்லாமல் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகரங்கள் மட்டுமல்லாது சிறிய நகரங்களில் உள்ள நகைக்கடைகளிலும் சிறப்பு விற்பனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நகைக் கடைகளில் நேற்று 15 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு 11 ஆயிரம் கோடி ரூபாய் வரை தங்கம் விற்பனையான நிலையில், தற்போது 20 சதவித விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அட்சய திருதியை தினமான நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 240 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 750-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் 90 ரூபாய் 50-காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..