1410 ரஷ்ய வீரர்கள் பலி..!! அச்சத்தில் உலக நாடுகள்..! 3ம் உலக போர்..?
வட கொரியா படைகளை முதன் முறையாக குர்ஸ்க் பிராந்தியத்தில் எதிர்கொண்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர் :
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது..
உக்ரைனில் இதுவரை 6,99,090 ரஷ்ய வீரர்கள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
கடந்த சில நாட்களுக்கு முன் கூட உக்ரைன் பாதுகாப்பு படை வீரர்கள் 1410 ரஷ்ய ராணுவ வீரர்களை ஒரே நாளில் தாக்குதல் நடத்தி கொன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது….
இதற்கிடையில் ரஷ்யாவின் வட கொரிய ராணுவ வீரர்கள் உக்ரைனில் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
இதுகுறித்த தகவல்களை ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல்களுக்கு ரஷ்யா மற்றும் வட கொரிய அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்காத நிலையில், உக்ரைன்-ரஷ்யா போரானது 3வது உலக போராக மாறி விடுமோ என்ற அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில் 15,000 வட கொரிய வீரர்கள் உக்ரைனின் போரில் ரஷ்யா களமிறக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது…