நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ‘லிப்ஃட்’ பழுதானதால் 2 மணி நேரமாக 13 பயணிகள் அதில் சிக்கித்தவித்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாகவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் பிரதான இடமாகவும் இருக்கும்.
இந்நிலையில் நேற்று(மார்ச்.13) மாலை ஒன்றரை வயது குழந்தை உள்பட 13 பேர் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் ‘லிப்ஃட்’ டில் சிக்கித்தவித்தனர்.
இதையடுத்து, அதில் இருந்த உதவி எண்ணை அழைத்து தகவல் தெரிவித்தனர்.பின்பு, ரயில்வே காவல்துறை மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதனை தொடர்ந்து, முதல்கட்டமாக மின்தூக்கியை இயக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. ஆகையால், தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு, ‘லிப்ஃட்’ டின் மேல்பகுதியில் இருந்த மின்விசிறியை, உள்ளே இருந்தவர்கள் உதவியுடன் அகற்றினர். அதன்பின், கயிறுகட்டி முதலில் பெண் குழந்தையை வெளியே தூக்கினர். அதனைத்தொடர்ந்து ஒருவர்பின் ஒருவராக சுமார் 2 மணிநேத்துக்கு பின் மீட்கப்பட்டனர்.
இதற்கிடையில்,அனைத்து ரயில் நிலையங்களிலும் ‘லிப்ஃட்’ டை பராமரிக்க தனி பணியாளரை நியமிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.