ADVERTISEMENT
மகளிர் நலனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்…
மகளிர் நலனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024”-யை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
அதேபோல், பொதுத்துறை சார்பில் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் 17 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 59 அறைகள் கொண்ட அரசு ஓய்வு இல்லத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதைதொடர்ந்து, காவல்துறை சார்பில் 23.53 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகள், நான்கு காவல் நிலையங்கள் மற்றும் ஒரு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் நிலையம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதற்கிடையே, போக்குவரத்து பணியாளர்களின் ஒருநாள் ஊதியத் தொகையான 14.23 கோடியை மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிக்காக அமைச்சர் சிவசங்கர் முதலமைச்சரிடம் வழங்கினார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.