மத்திய பிரதேசத்தில் டிப்பர் லாரி மற்றும் பேருந்து மோதி 13 பேர் உடல் கருகி பலி
மத்திய பிரதேசத்தில் டிப்பர் லாரி மற்றும் பேருந்து மோதிய விபத்தில் விபத்தில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் குனா பகுதியில் டிப்பர் லாரி மீது, பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. சிறிது நேரத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் உதவி தொகையும் வழங்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
