11ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி வெளியீடு..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்..!!
2024-2025ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வானது மார்ச் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான செய்முறை தேர்வானது பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
2025 ம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் :
மார்ச் 3ம் தேதி – மொழிப்பாடம்
மார்ச் 6ம் தேதி – ஆங்கிலம்-
மார்ச் 11ம் தேதி – கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி
மார்ச் 14ம் தேதி – கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்
மார்ச் 18ம் தேதி – உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்
மார்ச் 21ம் தேதி – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
மார்ச் 25ம் தேதி – இயற்பியல், பொருளாதாரம்..
இந்த தேர்வு முடிவுகளானது மே மாதம் 9ம் தேதி நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
2025 ம் ஆண்டிற்கான 11-ம் வகுப்புப் பொதுத்தேர்வு :
அதேபோல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வானது மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது.. மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு முடிவுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ம் தேதி வரை நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
2025 ம் ஆண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் :
மார்ச் 5ம் தேதி – மொழிப்பாடம்
மார்ச் 10ம் தேதி – ஆங்கிலம்
மார்ச் 13ம் தேதி – கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்
மார்ச் 17ம் தேதி – உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்
மார்ச் 20ம் தேதி – இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 24ம் தேதி – கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி
மார்ச் 27ம் தேதி – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
அதேபோல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவானது மே மாதம் 19ம் தேதி அன்று 2025ம் ஆண்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது…
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி., “பொதுவாக மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிரமம் இல்லாத வகையில் ஒவ்வொரு தேர்விற்கும் குறிப்பிட்ட இடைவெளி விட்டு மாணவர்கள் பாதிப்படையாதவாறு பொது தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும்” என இவ்வாறே அன்பில்மகேஷ் கூறினார்…