ஆயத்த ஆடைத்துறை.. புதிய ஆன்லைன் படிப்பு…!
ஆயத்த ஆடைத்துறையில் நிலையான நடைமுறைகளை மேம்படுத்த புதிய ஆன்லைன் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இது ஏற்றுமதியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆயத்த ஆடை துறை திறன் கவுன்சிலர் தலைவர் சக்திவேல் கூறினார்.
திருப்பூரில் ஆயத்த ஆடை, அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரம் துறை திறன் கவுன்சில், மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த புளூைஷன் இணைந்து ஆயத்த ஆடை துறையில் நிலையான நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நடைபெற்றது.
ஆயத்த ஆடை, அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரம் துறை திறன் கவுன்சில் கவுன்சில் தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ர மணியன் புளூைஷன் நிறுவன தெற்காசிய மண்டல இயக்குனர் கேத்ரீனா வெர்னா மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏழ்மையை ஒழிப்பது , ஆரோக்கிய மேம்பாடு உள்ளிட்ட நிலையான தரத்தை கடைப்பிடிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தரவுகளின் படி இந்த பாடத்திட்டம் கட்டமைக்கப்பட்டு உள்ளது. ஆயத்த ஆடைத்தொழிலில் தரம் மேபடுத்துவது குறித்த சான்றிதழ்களை வழங்கும் புளூசைன் நிறுவனம் இந்த ஆன்லைன் படிப்பை வழங்குகிறது.
இதன்மூலம் கற்றுக்கொண்டு ஆயத்த ஆடைத்தொழிலில் தரத்தினை மேம்படுத்திக் கொண்டு புளூஷைன் சான்று லேபிள் பெறமுடியும் என்றும் இதன் மூலம் ஆடைத்தொழில் மேம்படும் என்றும் ஆயத்த ஆடை, அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரம் துறை திறன் கவுன்சில் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”