பகவதி அம்மன் கோயிலில் 1008பேர் திருவிளக்கு பூஜை
கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் கடந்த சில தினங்களாலாக கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர கிராம முன்னேற்ற கழகம் சார்பில், பகவதி அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
விவேகானந்தா கேந்திர தலைவர் “அனுமந் ராவ்” தலைமையில் நெய் விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜையில் , அம்மன் போற்றி பாடல்கள் பாடி பூஜை செய்தனர்.
திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. திருவிழா தொடங்கிய நாளில் இருந்து, ஊரின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தலைவர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post