1000 புதிய வகுப்பறைகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறப்பு..!! எந்த மாவட்டத்தில் தெரியுமா..?
150 கோடி செலவில் 37 மாவட்டங்களில் பள்ளிகளில் கட்டப்பட்ட 1000 புதிய வகுப்பறைகளை கானொலி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்..
சென்னை, தலைமைச் செயலகத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை திறந்து வைத்தார்
பின்னர், கிராம ஊராட்சிக்கு பொது மக்கள் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்துவதற்கான இணையதளம் மற்றும் தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சிக் கணக்குகள் திட்டத்திற்கான இணையதளம், ஆகியவற்றை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின், தமிழ்ப் பரப்புரைக் கழகத் திட்டத்தின் கீழ் தமிழ் பரப்பும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் பதிவு செய்வதற்கான இணைய இணைப்பு மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இணையதளத்தினையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.
பிறகு, சுற்றுலாத் துறையின் தமிழ்நாடு சுற்றுலா கொள்கையை வெளியிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..