100 அடி உயர கொடிக் கம்பம்.. பிரம்மாண்டமாக ஏற்றப்பட்ட விஜயின் கட்சிக் கொடி..
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி அறிமுக விழவை கடந்த 22ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் த.வெ.க கட்சி தலைவர் விஜய் ஏற்றி வைத்தார்.
அதனை தொடர்ந்து கட்சி பாடலையும் வெளியிட்டனர். இரண்டு சிவப்பு நிறங்களுக்கு, நடுவே மஞ்சள் நிற கொடியில் அதன் நடுவே இரண்டு போர் யானைகளுக்கு , நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கட்சிக் கொடியினை தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் தெரியப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் லெப்ட் பாண்டி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நூறு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில், 9 அடி நீளத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த கட்சிக்கொடி கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் என ஏராளமானோர் ஆவலுடன் கலந்துகொண்டனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”