மல்யுத்த வீரர்களின் தொடர் போராட்டம். கைது செய்யப்படுவாரா பிரிஜ் பூஷன் சரண் சிங்?
புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. அதுகுறித்து எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என மற்ற மல்யுத்த வீரர்கள் 2 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரிஜ் பூஷன் சரண் சிங் 2011ம் ஆண்டு முதல் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மற்ற வீராங்கனை களுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளனர்.
அனால் இதுவரை, அவர் மீது எந்த வித நடவடிக்கையம் எடுக்கவில்லை. என்பதால் இந்தியாவின் முன்னணி
வீரர்களான விக்னேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், என அனைத்து மல்யுத்த வீரர்களும். பிரிஜ் பூஷனுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த போராட்டம் குறித்து வினிஷ் போகத்திடம் பேசிய போது, இந்த போராட்டம் தொடங்கி இரண்டு நாள் ஆகிறது. இதற்கு முன் நீதிக்காக போராடிய போது நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். எங்கள் மீது சிலர் சட்டத்திற்கு எதிராக போராடுகிறோம் என்றும் குற்றம் சாட்டினார்கள்.
ஆனால் இந்த முறை அப்படி நடக்க கூடாது, இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். தவறு செய்த பிரிஜ் பூஷன் சரண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்கள் போராட்டத்திற்கு உதவ, பத்திரிக்கையாளர்கள் மட்டும் வந்தால் போதாது, மற்ற கட்சி தலைவர்களும் உதவலாம்.
எங்களுக்கு காங்கிரஸ், பாஜக என்று தனி பாகுபாடு பார்க்கவில்லை, தவறு செய்தவர்களுக்கு தண்டனை தர வேண்டும் என நினைக்கும், எந்த காட்சியையும் நாங்கள் வரவேற்கிறோம். என பேசினார் வினிஷ் போகத்.