ஸ்ரீஹரிகோட்டா ஏவுதள வரலாறு தெரியுமா..?
வங்காளவிரிகுடா கரையோரம் இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு அரண் தீவு ஆகும். சென்னையில் இருந்து 80கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த தீவு இந்தியாவின் விண்கல ஏவு நிலையமான சதிஷ் தவான் விண்வெளி மையம் உள்ளது.
இஸ்ரோவின் ராக்கெட்டுகள் சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து தான் ஏவப்படுகிறது.., அதன் சதுர பரப்பளவு 145 சதுர கிமீ. 1969ல் ராக்கெட் எவதற்கு சிறந்த இடமாக ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா என்ற தீவு தேர்வு செய்யப்பட்டது.
இந்த ஏவுதளத்தில் முதன் முதலாக 1979ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஆர்.எஸ்.1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது, முதலில் அதற்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் என பெயரிடப்பட்டது.., 2002 ல் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சதிஷ் தவானின் சாதனைகளை சொல்லும் விதமாக அவரின் பெயர் இந்த ஏவுதளத்திற்கு வைக்கப்பட்டது.
மேலும் இதுபோன்ற பல அறிவியல் பூர்வமான தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..