ADVERTISEMENT
வின்சென்ட் தே பவுல் சபையின் வெள்ளி விழா கொண்டாட்டம்-சென்னை
சென்னை, மதுரவாயல் புனித அந்தோணியார் ஆலயத்தில், வின்சென்ட் தே பவுல் சபையின் வெள்ளி விழா கொண்டாட்டம் அருட் பணி ஆண்ட்ரூ டோம்னிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஏழை எளிய மக்களின் கல்வி, மருத்துவம், உணவு, உடை போன்ற அனைத்துத் தேவைகளுக்கும் உதவுகின்ற பணியை இந்த அமைப்புத் தொடர்ந்து 25 ஆண்டுகளாகச் செய்து வருகின்றது.
இந்நிகழ்ச்சியில், வின்சன்ட் தே பவுல் சபையின் மாவட்ட நிர்வாகிகள் திரு.லாரன்ஸ், திரு.பாபு, திரு.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பயனாளிகள் 10 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
புனித அந்தோணியார் ஆலயத்தின் பங்குத் தந்தை அருட்பணி ஆண்ட்ரூ டோம்னிக் அவர்கள் சபையின் வெள்ளி விழா மலரை வெளியிட, உதவித் தந்தை அருட்பணி சேசு ராஜ், தென்னிந்திய பத்திரிகையாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் G.நாகராஜன், வில்சன், திருமதி.ஜாய்ஸ் ஜென்சன், ஜான் வல்தாரிஸ் போன்ற அனைத்துச் சிறப்பு விருந்தினர்களும் பெற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.