தமிழர்களின் பண்பாட்டு உரிமையில் ஒன்றிய அரசு தலையிட கூடாது என மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி தெரிவித்தார். அந்த நிகழ்வில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் இருந்தனர்.
ஜல்லிக்கட்டை தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என்பது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பாடலாசிரியர் சினேகன், மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி,ஜல்லிக்கட்டுக்கு எதிராக, அதை தடை செய்ய வேண்டும் என பாஜகவின் விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறது. இதன் மூலம் தமிழர்களின் பண்பாட்டு உரிமையை பறிக்கும் வேலையை பாஜக செய்து வருவதாகவும், இது தமிழ்நாட்டின் மாநில உரிமைக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டு பேசினார்.