சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்ய கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. 3 வது நாளாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதில் கட்சியின் தலைவர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யபட வேண்டும் என எம்ஜிஆர் உருவாக்கிய விதிகளை யாராலும் மாற்ற இயலாது. ஆனால், கட்சி விதிகளை எல்லாம் அவசர கதியில் பழனிசாமி தரப்பினர் மாற்றியுள்ளதாகவும், அ.தி.மு.க.வின் அடிப்படை நோக்கமே மாற்றி அமைக்கப்பட்டதாகவும் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோன்று, தலைமை கழக நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் இல்லை என கூறிய ஓ. பி. எஸ். தரப்பினர் தனி மனிதனின் சுயநலத்துக்காகவும், பதவி வெறிக்காகவும் கட்சியை பலி கொடுக்கிறார்கள் என்றும்,
மேலும் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு ஓபிஎஸ்-க்கு மட்டுமே உள்ளதாகவும் இன்று தேர்தல் நடைபெற்றாலும் ஓபிஎஸ் தான் வெற்றி பெறுவார் எனறும் வாதிட்டனர்.வாதங்களை எல்லாம் கேட்டறிந்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்கின் விசாரணை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.