தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை…
தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழு கூடி, தமிழ்நாட்டுக்கு நவம்பர் 23- ஆம் தேதி வரை வினாடிக்கு 2 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகத்தை வலியுறுத்தியது.
இதற்கு, கர்நாடக மாநிலம் நீர் தர மறுப்பு தெரிவித்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 3-ஆம் தேதி அவசரமாக கூடி, ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையை செயல்படுத்த கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு இன்றுடன் முடிவடைந்த நிலையில், டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்தில் காணொலி மூலம் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள், ஒழுங்காற்று குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அப்போது, நிலுவையில் உள்ள தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் திறக்கவும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலுவையில் உள்ள தண்ணீரை திறந்துவிடவும் கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
