இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ரேபிடோ ஓட்டுநர்..!!
என்ன தான் பேருந்து மற்றும் ரயில் என பொது போக்குவரத்து இருந்தாலும் ஒரு சில சமையம் செல்லும் இடத்திற்கு விரைவாக செல்ல பலரும் பைக் டாக்சிகளை மட்டுமே விரும்பு கின்றனர். அதற்கான கட்டணமும் குறைவு என்பதால் இந்த சேவை பொதுமக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக ரேபிடோ பைக் டாக்சி ஓட்டுநர்கள் பாயனாளர்களிடம் பாலியல் ரீதியாக துன் புறுத்துவது ஆபாசமாக மெசேஜ் செய்வது.., நகை பறிப்பு போன்ற செயல்களை செய்வது என பல குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. இருந்தும் மக்கள் அந்த ரேபிடோ சேவையை பயன் படுத்தி கொண்டு தான் இருக்கின்றனர்.
இதை போல் கடந்த ஜூலை 21ம் தேதி பெங்களூருவை சேர்ந்த ஆதிரா என்ற 21 வயது இளம்பெண் டவுன் ஹாலில் நடைபெற்ற மணிப்பூர் கலவரத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அந்த போராட்டத்தை முடித்து விட்டு அங்குள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு செல்ல ரேபிடோ பைக் டாக்சியை புக் செய்துள்ளார். ஆனால் புக் செய்த பைக்கிற்கு பதிலாக வேறு ஒரு பைக் வந்துள்ளது.
சந்தேகம் அடைந்த அந்த பெண் இதுகுறித்து சில கேள்விகள் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் அந்த பைக் பஞ்சர் ஆகிவிட்டது அதனால் தான் இந்த பைக் என சொல்லி OTP கேட்டுள்ளார். OTP பொருத்தமானதும்.., அந்த பெண் அதை நம்பி பைக்கில் எறியுள்ளார்.
பின் சில தூரங்கள் சென்றதும் ஆள் நடமாட்டம் இல்லா இடத்திற்கு சென்ற அந்த பைக் ஓட்டுநர்.., ஒரு கையில் பைக் ஓட்டிக்கொண்டு அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியான செயலில் ஈடுபட்டுள்ளார். பயந்து போன அந்த பெண் எதுவும் பேசாமல்.., வீடு வருவதற்கு முன்னே இறங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த ரேபிடோ ஓட்டுநர் ஆதிராவிற்கு அன்று இரவு முழுவதும் ஆபாச மெசேஜ் செய்துள்ளார். பயந்து போன ஆதிரா இது பற்றி ரேபிடோ நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளார்.., புகாரை ரேபிடோ நிறுவனம் நிராகரித்ததால் அவரின் ட்வீட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
அந்த ரேபிடோ பைக் ஓட்டுநர் அனுப்பிய ஆபாச மெசேஜ் களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டு பின் இது பற்றி நேற்று இரவு பெங்களூரு மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.., புகாரை ஏற்ற பெங்களூர் மகளிர் காவலர்கள் இன்று காலை அந்த ஓட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ரேபிடோ பைக் ஓட்டுநர் செய்த இந்த சம்பவம் பலரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..