அதிமுக சின்னம், பெயர்,கொடி ஆகியவற்றை பயன்படித்த தடை விதிக்கக்கோரி வழக்கு….
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்தக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இது தொடர்பான மேல்முறையீடு விசாரணையின்போது இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.
ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கினாலும் அவரது ஆதரவாளர்கள் இன்னும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக உள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெயர், கொடியை பயன்படுத்தக்கூடாது என்ற இடைக்கால தடை தொண்டர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதமிட்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் லட்சம் பேர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக உள்ளனர் என்று கூறுவது பொய் என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.