உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..! களத்தில் மதிமுகம்…!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திபட்டில் மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணி சார்பில் மாவட்ட இளைஞரணி செயலாளர் தலைமையில் மது, கஞ்சா, குட்கா, அபின் ஹெராயீன் , கொக்கைன் உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராக இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட தலைவர் நசீர் அஹமத் துவக்கி வைத்தார்.இதையடுத்து இருசக்கர வாகன பேரணி துத்திப்பட்டு பகுதியில் துவங்கி நேதாஜி சாலை வழியாக வருவாய் துறை அலுவலகம் அருகே வந்தடைந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் திடிரென சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி கழுகுமலை, செட்டிக்குறிச்சி,, நாலாட்டின்புதூர், இனாம் மணியாச்சி, திட்டங்குளம், மூப்பன்பட்டி, இலுப்பையூரணி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் பூங்கா நகர் பகுதியில் அரசு வழங்கிய புறம்போக்கு நிலத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது குடியிருப்பு பகுதிக்கு செல்ல ஒரு வழிப்பாதை மட்டுமே உள்ள நிலையில் சாலைக்கு எதிர் புறத்தில் உள்ள தனியார் குடியிருப்பை சேர்ந்த சிலர் ஒரு வழிப்பாதையாக உள்ள வழிதடத்தையும் ஆக்கிரமிப்பு செய்து தங்களுக்கு பாதையை தர மறுப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கன மழை பெய்தது. இதனால் மழைநீருடன் கழிவுநீர்கள் ஆங்காங்கே சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் இந்த ஒரு மணி நேர கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் பூனாவிலுருந்து கன்னியாகுமரி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயிலில் சோதனை செய்த போது சுமார் 18 கிலோ கஞ்சாவினை கைப்பற்றி போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துரையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் கஞ்சாவை விட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் புலியூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியில் தொடர்ந்து பெய்த கனமழையால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர் சிவகாம சுந்தரி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர் .
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருப்பதாக, அப்பகுதி மக்கள் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்நிகழ்வு குறித்து வழக்குபதிவு செய்து, பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..