உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்..!!
வேலூர் மாவட்டம் :
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் சுப்ரமணியசாமி திருக்கோவிலில் ஆறுமுகசாமி சமேத வள்ளி தெய்வானைக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் :
உலக முழுவதும் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஹியூமன் பவர் ஃபெடரேஷன் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் புதிய புத்தாடைகள் இனிப்பு மற்றும் காலை சிற்றுண்டிகள் வழங்கி கொண்டாடினர்.
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூரில் சுதந்திர போராட்ட தியாகி இசை மூர்த்தி தியாகராஜ சுவாமியின் 28ஆம் ஆண்டு சிறப்பு இசை விழா நடைப்பெற்றது.இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்று கலைபண்பாட்டு துறை அலுவலகம் கொண்டுவரப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் :
மயிலாடுதுறை இளையாளுர் ஊராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து தர வலியுறுத்தியும், புதிய சாலைகள் அமைத்து தர வலியுறுத்தியும் ஒன்றிய தலைவர் அனீஸ் ரகுமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் :
திருவண்ணாமலை மாவட்டம் பீமானந்தல் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் தீபா தம்பிதியினரிடம் கொண்டு சென்ற 5 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக செங்கம்காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் வெங்கடேசன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..