உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை முதல் ஒரு சில பகுதிகளில் மழை பெய்த நிலையில் வாணியம்பாடி அதன் சுற்றியுள்ள பகுதிகளான, பெருமாள்பேட்டை, கொடையாஞ்சி, அம்பலூர், பெரியப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் குடியிருப்பு வீட்டின் அருகில் புளிய மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.இந்த புளிய மரம் வீட்டின் அருகாமையில் வளர்ந்து வருவதால் வீட்டின் சுவர் சேதம் அடைந்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் புளிய மரத்தை அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை காரணமாக ஜமுனாமுத்தூர் மலைப்பகுதியில் பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தண்டராம்பட்டு, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், ஆரணி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதனால் ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் புரட்டாசி முடிந்தால் பழவேற்காடு மீன்மார்க்கெட்டுக்கு மீன்பிரியர்கள் படையெடுத்துள்ளனர். மேலும் வடகிழக்கு பருவமழையால் வங்கக்கடலில் நிலவி வந்த வளிமண்டலம் கரையை கடந்ததை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தொடங்கியுள்ளனர். இதனால்பழவேற்காடு மீன்மார்க்கெட்டிற்கு மீன்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் அசைவபிரியர்கள் மீன்வாங்குவதற்கு பழவேற்காட்டிற்கு வந்ததால் மீனவர்களும், மீன்வியாபாரிகளும், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அருகே அவிநாசி ஒன்றியம் போதும்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் பாளையம் மாகாளியம்மன் கோயில் அருகே தரைமட்ட பாலம் உள்ளது. இந்த நிலையில் கன மழை காரணமாக பாலம் முழுதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் உடனடியாக இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..