உங்கள் ஊர் செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக களத்தில் மதிமுகம்…!!
சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. உற்சவர் தேரில் எழுந்தரு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் உதவி ஆணையாளர் சிவக்குமார், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டும் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள செல்போன் கடைக்கு வந்த பெண் ஒருவர் செல்போனை எக்ஸ்சேஞ்ச் செய்ய வேண்டும் என கூறி ஊழியர்கள் செல்போன்களை காண்பிக்க கூறியுள்ளார். அதன் பின்னர் தனது மொபைலுக்கு டெம்பர் கிளாஸ் மாற்றி தரும்படி கூறியுள்ளார். ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஒன்றை திருடியுள்ளார். தற்பொழுது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
திருப்பத்தூர் தொழில் சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், குமரி முதல் கோட்டை வரை கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் கட்சி சார்பில் தொழிற்சங்கங்களின் உரிமை மீட்பு புரட்சி பயணம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அரசு இணையதளம் தங்கு தடை இன்றி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டியும், அமைப்புசாரா 16 நல வாரியத்திற்கு ஒரு சதவீதம் லிவி வசூல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டி மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லியிடம் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பட்டு செல்லும்கிராம சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் ஓட்டுனர் கோபி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கந்தசாமி மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் திடிர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 13 கடைகளுக்கு அபராதம் விதித்து, எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையின் ஆறாவது கொண்டை ஊசி வளைவில் மரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறிது நேரம் போராடி சாலைகளை அப்புறப்படுத்தினர். இரவு நேரம் என்பதால் பெரிதளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் கூட்ரோட்டில் நெமிலி கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றிக்கழகம் சார்பில், நெமிலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சாய்குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் காந்திராஜ் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் காந்திராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணி மற்றும் இளநீர் வழங்கினார்.