நீங்கள் பார்க்க மறந்த பல்வேறு முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!!
விருதுநகர் மாவட்டம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மலையரசன் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தனிப்படை காவலராக இருந்துள்ளார். இவரது மனைவி பாண்டிச்செல்வி விபத்தில் உயிர் இழந்துள்ளார். இந்நிலையில் மலையரசன் கடந்த சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தரனை எஸ்.ஐ., மாரி கண்ணன் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்துள்ளனர்.
திருப்பத்தூர் ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள இருப்பு பாதையை கடந்த சில வருடங்களுக்கு முன் இருப்புபாதை இரயில்வே துறையினர் அடைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பலதரப்பட்ட மக்கள் அளித்த கோரிக்கையின் பேரில், தற்போது புதிய பாலம் கட்டும் பணி தொடங்கபட்டுள்ளது . இதனால் அப்பகுதி மக்கள், மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தென்னம்பாளையம் பகுதியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கொடியேசத்து துவக்கி வைத்தார். இதில் செவிலியர்கள் கலந்து கொண்டு காசநோய் விழிப்புணர்வு குறித்து பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று முதியவர் மீது மோதியுள்ளது. இதில் முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் தனியார் பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பள்ளிவாசல் தெருவில் சாகுல் ஹமீது என்பவருக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரபோராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 2 இலட்சம் ரூபாய் மதிப்பிலான எண்ணெய் மூலப் பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக சாகுல் ஹமீது வேதனை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் அருகே நாச்சிபாளையம் பகுதியில் அரிய வகை ஆந்தை ஒன்று கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு வந்த அதிகாரிகள் ஆஸ்திரியிலேயா நாட்டின் ஆந்தையை மீட்டு, முதல் உதவி சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் செவத்தூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான திருப்பதி மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும், இலவச ஆவின் பூத் கடை வழங்க ஆவணம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லியிடம் மனு அளித்துள்ளனர்.